இயேசுவே!
உனக்காக வாழத் துடிக்கின்றேன்
உலகத்தின் சூழலில் தவிக்கின்றேன்
கரையும் ஒவ்வொரு நிமிடமும்
உன் கருணை வேண்டும்.
சவாலான வாழ்வுதான் இது
சாதிக்கத் துடிக்கின்றேன்
உன் துணையின்றி
சருக்கல்களே மிஞ்சுகின்றன.
துரிதமாக நகரும் உலகில்
பரிதாபமாக நிற்கின்றேன்
நான் நினைப்பதற்குள்
அனைத்தும் நிறைவுபெற்றுவிடுகின்றன.
உன் நினைவில் மட்டும்
நித்தமும் வாழ
வழியொன்று சொல்வாயா?!?